இந்த 4 டிப்ஸை பயன்படுத்தி வழுக்கை தலையிலும் முடி வளர செய்யலாம் : அட நம்புங்க...

You can use this 4 tips to bump your hair on the head believe in ...

நம் தலையில் 1 இலட்சத்துக்கும் மேலான முடி இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவில் முடி உதிர்த்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.  ஆனால், எப்போது ஒருவருக்கு அளவுக்கு அதிகமான அளவில் தலைமுடி உதிர்கிறதோ, அப்போதுதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. இதைதான் "அலோப்பேசியா ஏரியேட்டா" என்று அழைப்பர்.  இந்நிலை இருந்தால், தலைமுடி அதிகம் உதிரும் ஆனால் மீண்டும் முடி வளராமல் வழுக்கை ஏற்படும். பொதுவாக இப்பிரச்சனையால் 40-45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.  ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதத்தில் பித்தம் உடலில் அதிகம் இருந்தால், தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.  இதற்கு  மருந்தையும் ஆயுர்வேத மருத்துவமே கூறுகிறது. அதன்படி செய்தால் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் தலைமுடியை வளரச் செய்யலாம்.  டிப்ஸ் 1: பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஒரு மருத்து குணம் நிறைந்த மூலிகை தான் துளசி. இந்த துளசி தலைமுடியின் வலிமையை மேம்படுத்தவும், நரைமுடியைத் தடுக்கவும் உதவும். பயன்படுத்தும் முறை  துளசி விதைகளை பொடி செய்து விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும். டிப்ஸ் 2: பிராமி என்னும் ஆயுர்வேத மூலிகை, பழங்காலம் முதலாக தலைமுடி பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது. இது தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். மேலும் இந்த மூலிகை மயிர்கால்களை வலிமையடையச் செய்யும். பயன்படுத்தும் முறை  நாட்டு வைத்திய கடைகளில் பிராமி எண்ணெய் விற்கப்படும். அந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை ஸ்கால்ப்பில் தடவி வந்தால், வழுக்கை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். டிப்ஸ் 3: திரிபலா என்பது மூன்று மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேதத்தில் தலைமுடி பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் ஓர் அற்புதமான பொருள். இதனை மாத்திரை வடிவிலோ, டீ அல்லது பொடி வடிவிலோ பயன்படுத்தலாம். இது தலையில் உள்ள திசுக்களை புத்துணர்ச்சியடையச் செய்யும் மற்றும் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் செய்யும். பயன்படுத்தும் முறை  திரிபலா பொடியை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 3-4 முறை தடவி ஊற வைத்து அலசி வர வேண்டும். டிப்ஸ் 4: ஆளி விதையில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், வழுக்கையைத் தடுக்கும் மற்றும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும். ஆளி விதையை உணவில் சேர்த்து வருபவர்களின் தலைமுடி ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும். இதற்கு ஆளி விதையில் உள்ள சத்துக்கள் தான் காரணம். பயன்படுத்தும் முறை  ஆளி விதையை உணவில் சேர்த்து வருவதன் மூலம் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதற்கு ஆளி விதையை மில்க் ஷேக் உடன் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தினமும் காலையில் ஆளி விதையை பொடி செய்து நீரில் கலந்து குடித்து வரலாம்.

No comments:

Powered by Blogger.