நடிகர் கருணாஸ் மகனை அசுரன்ல பார்த்திருப்பீங்க. அவரது மகளை பார்த்துளீர்களா.
தமிழ் சினிமா துறை உலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் இசை அரசியல் வாதியும் ஆவர். மேலும்,நடிகர் கருணாஸ் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் 1970 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தமிழ் சினிமா திரை உலகில் 2001 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானர். இந்த ஒரு படத்திலேயே மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். பின்னர் கருணாஸ் அவர்கள் வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து உள்ளார்.

மேலும், இவரை இந்த அளவிற்கு பிரபலம் ஆனது விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் தான். நடிகர் கருணாஸ் –கிரேஸ் ஆகிய தம்பதியினருக்கு ஒரு கருணாஸ் மகன் உள்ளார்கள். மேலும், மகள் பெயர் டயானா மற்றும் மகன் பெயர் கென். தற்போது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் நடிகர் கருணாஸ் அவர்களின் மகன் கென் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள். மேலும்,கென் கருணாஸை பார்ப்பதற்கு அப்படியே நடிகர் கருணாஸ் மாதிரியே இருக்கிறார் என்று பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள். மேலும்,நடிகர் கருணாஸ் அவர்கள் சினிமா துறையை விட்டு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது நடிகர் கருணாஸ் குடும்பம் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவு இட்டு வருகின்றன.அதிலும்,நடிகர் கருணாஸ் மகன் பதிவு பார்ப்பதற்கு கருணாஸ் மாதிரியும், மகள் டயானாவை பார்ப்பதற்கு அப்படியே அவங்க அம்மா கிரேஸ் மாதிரியே இருக்கிறார்கள் என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
TAGS #Actor #Karunas karunas #family #நடிகர் #கருணாஸ் #நடிகர் கருணாஸ் குடும்பம்
No comments: