நல்ல மனிதனாக இருங்கள்

https://www.blooup.co.in/

நல்ல காதலன் நல்ல கணவன் இல்லை .
நல்ல கணவன் நல்ல நண்பன் இல்லை .
நல்ல நண்பன் கூட பெரும்பாலும் நல்ல காதலன்னோ கணவனோ இல்லை. இப்படி இருப்பவர்கள் நல்ல தகப்பனாக அல்லது நல்ல வழிகாட்டியாக இல்லை .
எல்லா ஆண்களும் ஒடுகின்றனர்.
நிறைய சம்பாதிக்க .!
தன்னை சார்ந்தோரை சந்தோஷமாக வைக்க ஆனால் வைக்கின்றனரா தெரியவில்லை .?
நல்ல நண்பனாக வேண்டாம் .
நல்ல காதலனாக வேண்டாம் .
நல்ல கணவனாக கூட வேண்டாம் .
நல்ல மனிதனாக இருங்கள் ஆண்களே .
இன்னும் எவ்வளவு நாட்கள் உங்களை பார்த்து ஒட வேண்டும் நாங்கள் .
எவ்வளவு நாள் எங்களை உங்களின் சொத்தாக பார்ப்பீர்கள் .
உங்கள் மரியாதைகளை இன்னும் எவ்வளவு நாள் நாங்கள் எங்கள் தோள்களில் சுமக்க வேண்டும் .
காதலிக்கவில்லை என்று கொலை செய்வது எல்லாம் எவ்வளவு பெரிய சைக்கோதனம் தெரியுமா .?
உங்களுக்கு விருப்பமானது
எங்களுக்கு விருப்பமில்லையெனில் கட்டாயத்தின் பெயரில் உங்கள் மேல் காதலை கொண்டு வர முடியுமா .?
அன்பு என்பது கத்தி முனையிலும்
காலில் விழுந்து கெஞ்சி யாசகம் பெறுவது எல்லாம் அல்ல !
அது அன்பாகுமா .?
அந்த குழந்தையை அதன் தாய் தகப்பன் எவ்வளவு கனவு கண்டு அன்பை பொழிந்து தன் வாழ்நாளின் ஊந்து சக்தியாக்கி அணுஅணுவாக ரசித்து வளர்த்து இருப்பார்கள் .?
யோசிக்க மாட்டிர்களா சிறிதேனும் .!
பொதுவாக பிறந்த குழந்தை இறந்தால் பாதிப்பு பெற்றோர்களுக்கு கொஞ்சமே .
அதை வளர்த்து வளர வளர ரசித்து அது சிரிக்கும் போது சிரிச்சு அழும் போது அழுது பிடிச்சதை தேடி ஒடி .
தன் ஒட்டு மொத்த வாழ்வையும் அந்த குழந்தையே சிந்தனையாகி ஒடுபவர்கள் இந்த குழந்தையின் இழப்பிற்க்கு
பின் என்ன ஆவார்கள்.?
அன்பு எதையும் எதிர் பார்க்காது .
அன்பு எதையும் கட்டாயப்படுத்தாது .
அன்பு எந்த வரை முறையின் கீழ் வராது .
அது ஒழுங்கற்றது .
ஆனால் பவித்திரமானது .
இரண்டு மார்பும்
ஒரு யோனியும்
கொஞ்சம் சதையும்
கொஞ்சம் வண்ணமும் .
கொஞ்சம் வனப்பும் மட்டுமே பெண்கள் என்ற சிந்தனைகளை மாற்றுங்கள் .
உங்களுக்கு இருப்பதை போலவே ரத்தம் சதை எலும்பு நரம்பு உணர்ச்சி மூளை அதில் விருப்பு வெறுப்பு ஆசாபாசம் எல்லாம் உள்ளது .
தயவு செய்து பெண்களை கடவுளாக கொண்டாட வேண்டாம் .
தாய் நாடு என்ற பெயரை கூட மாற்றிக்கொள்ளுங்கள் .
நதிக்களுக்கு எங்கள் பெயர் தேவை இல்லை .
எங்களை சக மனுஷியாக நடத்துங்கள் அதுவே போதுமானது .
உங்களிடம் எதிர்ப்பார்ப்பதும் அவ்வளவே .
எங்கு எல்லாம் பெண் அழிக்கப்படுகின்றார்களோ அங்கு அந்த தேசமும் அந்த மனிதர்களும் அந்த இனமும் அழியும் .


Tamil Stories, friends, enimies, Gender, male, female, poet, BlooupTv,

No comments:

Powered by Blogger.