ஒரே அடி இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன மாணவி சோபியா... வைரலாகிறது #பாசிசபாஜக_ஆட்சிஓழிக

டுவிட்டரில் மாணவி சோபியா 2-வது நாளாக முதலிடம் பிடித்துள்ளார். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சோபியா பற்றிய செய்தியை ட்வீட் செய்துள்ளனர். Standwith சோபியா என்ற ஹேஷ்டேக் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.

Everyone will react like that only coz u didn't do anything for Tamil Nadu. Akka pannunathu crt. neega meeting la other party pesamaya irupiga. She got the chance to see u in airport that's y she started criticising



Social web sites Tranding Sophia

முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில், பா.ஜ.க. தலைவர் தமிழிசையை பார்த்ததும், அதே விமானத்தில் பயணித்த மருத்துவ மாணவி சோபியா, திடீரென பா.ஜ.க. ஒழிக என்று முழக்கமிட்டார். இதனால் ஆவேசமடைந்த தமிழிசை, விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். விசாரணையில், மாணவி சோபியா கனடாவில் படித்து வருவதும், அவர், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவரின் மகள் என்பதும் தெரிய வந்தது. 


புகாரின் பேரில் சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் சோபியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் டுவிட்டரில் மாணவி சோபியா 2-வது நாளாக முதலிடம் பிடித்துள்ளார். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சோபியா பற்றிய செய்தியை ட்வீட் செய்து வருகின்றனர். 


சோபியாவுக்கு ஊடகத்திலும் முதலிடம்
வட இந்திய ஊடகங்கள் அனைத்திலும் சோபியா பற்றிய செய்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. சோபியாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. சோபியாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட செயல் துணிச்சலானது என்று பாராட்டு குவிந்து வருகிறது. இளைஞர்களின் குரலை சோபியா பிரதிபலித்ததாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
  • Tranding

  • Sophia

No comments:

Powered by Blogger.