இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டீங்கனா நிச்சயம் உங்களுக்கு வழுக்கைதான்..!

எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அவற்றிற்கு உணவு மிகவும் இன்றியமையாததாகும். "உணவே மருந்து " என்ற காலம் என்றோ மலையேறி போய் "மருந்தே உணவு" என்றாகி விட்டது. மனிதன் பரிணாமம் அடைந்தது போல உணவின் தன்மையும் பரிணாமம் அடைந்து கொண்டே வருகிறது. ஆனால், அவற்றின் வளர்ச்சி மிகவும் மோசமான நிலையையே அடைகிறது. உணவில் நச்சு தன்மையே பெரிதும் அதிகரிக்கிறது. உணவு இயற்கை வடிவில் இல்லாததால் நமக்கு பல புதிய புதிய நோய்கள் வர தொடங்கி உள்ளன.

foods that cause hair loss

இது புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் ஒரு மிக பெரிய தொடக்க புள்ளியாக இருக்கிறது. இந்த பிரச்சினையில் ஒன்றுதான் முடி உதிர்வும், அதனால் வர கூடிய வழுக்கையும். எந்தெந்த உணவுகளை உண்டால் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படும் என்ற முழு ஆய்வையும் இந்த பதிவில் நாம் அறியலாம்.

ஏன் முடி உதிர்கிறது..?

ஏன் முடி உதிர்கிறது..? நமது உடலில் பெரும்பாலான இடங்களில் முடி வளர்வது இயல்பே. ஆனால், மற்ற இடங்களில் முடி உதிர்ந்தால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. மாறாக தலையில் முடி உதிர்ந்தால் கட்டாயம் மிக பெரிய பிரச்சினைதான். முடி உதிர்வது பல காரணிகளாக பிரிக்க படுகிறது. பரம்பரை ரீதியாக, உணவின் நச்சு தன்மை, ஊட்டசத்து குறைபாடு, உடல் நிலை கேடு, அதிக மாத்திரைகள் உட்கொள்ளுதல், முடியிற்கு வேதி பொருட்களை பயன்படுத்துதல்... போன்றவையே முடி உதிர்வுக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

Image result for sugar

அதிக சர்க்கரை அதிக முடி..! எடுத்து கொள்ளும் உணவில் அதிக சர்க்கரை இருந்தால் அது கட்டாயம் உடல் நலத்தை பாதிக்கும். குறிப்பாக முடி உதிர்வு பிரச்சினைக்கு இது வழி வகுக்கும். வெள்ளை அரிசி, பாஸ்தா, உருளை கிழங்கு, ப்ரெட் இவற்றில் அதிக படியான சர்க்கரை அளவு உள்ளது. எனவே இவற்றை அதிகம் உணவில் சேர்ப்பதை தவிருங்கள்.

மீன்களும் முடிகளும்..!

மீன்களும் முடிகளும்..! இப்போதெல்லாம் மீன் சத்தான உணவாக கருதப்படுவதில்லை. இதற்கு முழு காரணமும் கடலில் உள்ள நச்சு தன்மைதான். கடலில் மெர்குரியின் அளவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் கடலில் வாழும் மீன்களும் இதனை உண்கிறது. பிறகு நாமும் இந்த மீனை சாப்பிடுவதால் உடலில் இந்த மெர்குரி அதிகம் சேர்கிறது. இது முடி கொட்டும் பிரச்சினைக்கு பெரிய காரணியாக கருதப்படுகிறது.

அமில பொருட்களும் முடியும்..!

அமில பொருட்களும் முடியும்..! முடி கொட்டும் பிரச்சினைக்கு அமிலங்கள்தான் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது. நீங்கள் அடிக்கடி குளிர்பானங்களை விரும்பி குடிக்கிறீர்கள் என்றால், உங்கள் முடியின் ஆயுள் மிக கம்மி என்பதை நினைவில் கொள்ளுங்கள். குளிர் பானங்களில் அதிகமான அளவில் சர்க்கரை மற்றும் கார்போனேட்டட் அமிலங்கள் சேர்ப்பதால் அது முடியின் நலனை பாதித்து முடி உதிர்வை ஏற்படுத்தும்.

வறுத்த உணவு வேண்டாமே..!

வறுத்த உணவு வேண்டாமே..! நம்மில் பலருக்கு எண்ணெய்யில் பொறித்த அல்லது வறுத்த உணவு என்றால் அவ்வளவு பிரியம்தான். ஆனால், இது நம் முடியின் வளர்ச்சிக்கே ஆப்பு வைத்தால் எப்படி..! அதிகமாக எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் உடலில் ஹார்மோன்கள் குறைபாடு ஏற்பட்டு முடி உதிர்வை கொடுக்கும். இதனால் விரைவிலே வழுக்கையும் வருகிறது.

முடியை கொட்ட செய்யும் கார்ப்ஸ்..!

முடியை கொட்ட செய்யும் கார்ப்ஸ்..! இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் விரும்பி சாப்பிடுவது பிஸ்கட், கேக் போன்றவற்றையே. இதில் சர்க்கரையும், காபோஹைட்ரடும் அதிகம் நிறைந்திருக்கும். இது நிச்சயம் உடலுக்கு சத்தை தராமல் பல வித உடல் கேடுகளையே தரும். அத்துடன் முடியின் வேரை வலுவிழக்க செய்து கொட்டிவிட கூடும்.

காபி, டீ தவிர்க்க...

காபி, டீ தவிர்க்க... வேலை நேரங்களில் நம்மை அறியாமலே பல முறை டீ மற்றும் காபியை குடித்து கொண்டே இருப்போம். இதன் விளைவு அதன் பிறகுதான் ஆரம்பமாகும். நீங்கள் ஒரு நாளைக்கு அதிக முறை இவற்றை அருந்தினால் இவை உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு முடியின் நலனையும் உருகுலைக்கும்.

வைட்டமின் எ எப்படி..?

வைட்டமின் எ எப்படி..? ஒரு சில ஆய்வுகள் வைட்டமின் எ அதிகமாக எடுத்து கொண்டால் அது முடியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறுகிறது. சிலர் உடலில் வைட்டமின் எ குறைவாக இருக்கிறது என்பதால் அவற்றை மாத்திரை வடிவில் உண்ணுவார்கள். அவ்வாறு செய்வது முடியிற்கு பெரிய விளைவை தரும். எனவே இதை தவிர்த்து விடுங்கள்.

மது முடிக்கும் கேடு..!

மது முடிக்கும் கேடு..! பல வகையான வாசகங்கள் மதுவை பற்றி எல்லா இடத்திலும் எழுதி போட்டாலும் நாம் அதை நிறுத்துவதாக இல்லை. பொதுவாக மது அருந்தினால் அது உடலில் செயல்பாட்டை முற்றிலுமாக சீர் குலைத்து விடும். முடி சார்ந்த அனைத்து கோளாறுகளுக்கும் இந்த மது பழக்கம் முதல் இடத்தில உள்ளது.

முடியின் பாதுகாப்பிற்கு...

முடியின் பாதுகாப்பிற்கு... உங்கள் முடி அதிகம் கொட்டுக்கிறதென்றால் மேற்கண்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள். அத்துடன் இயற்கையிலான உணவு பழக்கத்தை மேற் கொள்ளுங்கள். முடியின் வளர்ச்சிக்கு வைட்டமின் சி, புரதம், வைட்டமின் பி, ஜின்க், காப்பர் போன்றவை நிறைந்துள்ள உணவுகளை உண்ணுங்கள். இது முடி உதிர்வை தடுத்து வழுக்கை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி தரும்.

Food Habits That Cause Hair Loss Hair loss doesn’t happen without reason. Many reasons for hair fall like heredity, foods, chemicals, medications..etc

beauty hair hair care foods fish hair loss அழகு குறிப்பு முடி முடி உதிர்வு மீன் உணவு

No comments:

Powered by Blogger.