பிக் பாஸ் செய்த தந்திரம்..! பாலாஜி செய்த துரோகம்..! யாஷிகா தலைவியா..?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவியாக யாஷிகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக நேற்று பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை அறிவித்திருந்தார். இதில் யாஷிகா, ரித்விகா, மும்தாஜ், விஜயலக்ஷ்மி, சென்ராயன் ஆகியோர் பங்குபெற்றனர், பாலாஜி இந்த டாஸ்கை கண்காணிக்கும் தலைவராக இருந்தார்.
போட்டியாளர்களுக்கு ஒரு கூடையை முதுகில் மாட்டிக்கொண்டு விஜி பாஸ் வீட்டின் வெளியே இருந்து வீசும் பந்துகளை அந்த பந்தில் போட வேண்டும். இதில் முதுகில் மாட்டிய கூடையை கழட்ட கூடாது, அது எப்போதும் முதுகில் தான் இருக்க வேண்டும் என்பது தான் டாஸ்க். இந்த டாஸ்கில் வெல்பவர்களுக்கு தலைவர் பதவியும், இம்முனிட்டி பவரும் கிடைக்கும்.அது என்னவோ தெரியவில்லை யாஷிகா அல்லது ஐஸ்வர்யா தலைவரானால் மட்டும் தான் பிக் எதாவது சூப்பர் பவரை அறிவித்துவிடுகிறார். இவர்கள் இருவர் மீது மட்டும் பிக் பாஸிற்கு என்ன ஒரு கரிசனம் என்று தான் தெரியவில்லை.
இதனால் இந்த டாஸ்க் அறிவித்த அடுத்த கணமே வழக்கம் போல யாஷிகா அல்லது ஐஸ்வர்யா தான் ஜெயிப்பார்கள் என்று தெளிவாக தெரிந்திருந்தது. அதே போல இந்த டாஸ்க் நியாயமாக நடந்தது போல தெரிவவில்லை. ஏனெனில் இந்த டாஸ்கில் ஜனனி, பாலாஜி, டேனி இந்த வார நாமினேஷனில் இருப்பதால் அவர்கள் இந்த டாஸ்கில் கலந்து கொள்ள முடியாது என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். ஆனால், கடந்த வாரம் மஹத் நாமினேஷனில் இருந்த போது அவர் அணைத்து டாஸ்க்கிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டாஸ்கில் ரித்விகா, மும்தாஜ், விஜயலக்ஷ்மி ஆகியோர் நியாயமாக விளையாடினர். இந்த டாஸ்கின் போது கூடையை கழட்டிய சென்ராயனை, பாலாஜி கூடையை கழட்டினாள் பவுல் என்று அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார்.
அதே போல ஐஸ்வர்யாவும் கூடையை கழட்டி பந்துகளை சேகரித்த போது மட்டும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தார் பாலாஜி, இருப்பினும் ரித்விகா, ஜனனனி ஆகியோர் ஐஸ்வர்யா தவறாக விளையாடுகிறார் என்று கூறிய பின்னரே ஐஸ்வர்யாவை வார்ன் செய்தார் பாலாஜி. இந்த டஸ்கில் மிகவும் சூட்சமாக விளையாடிய யாஷிகா, குடத்தை இடுப்பில் வைத்துக் கொள்வது போல கூடையை வைத்துக் கொண்டு பந்துகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.
இதனால் அவர் விரைவாக பந்துகளை சேகரிக்கவும், சேகரித்த பந்துகள் கீழே விழாமல் இருக்கவும் சாதகமாக அமைந்தது. யாஷிகா இப்படி செய்ததை மும்தாஜ், ரித்விகா, ஏன் ஜனனனி ஆகியோர் கூட தவறு என்று கூறினர். ஆனால், பாலாஜி அதனை கண்டுகொள்ளாமல் சென்ராயன் செய்வதை மட்டும் அடிக்கடி பவுல் என்று குறிகொண்டே இருந்தார். இதனை காணும் போது பாலாஜி ஒருதலை பட்சமாக நடந்து கொண்டது போல தான் தெரிந்தது.
யாஷிகா தவறாக விளையாடினார் என்பது பார்வையாளர்களுக்கும் தெளிவாக தெரிந்தது. இந்த டாஸ்க் முடிந்து பந்துகளை எண்ணும் போதாவது யாஷிகா விதி மீறி நடந்து கொண்டார் என்று பாலாஜி கூறுவர் என்று எதிர்பார்த்தால், அப்போதும் அதனை பற்றி எதுவும் கூறாமல் யாஷிகாவை வெற்றியாளர் என்றே அறிவித்து விட்டார் பாலாஜி. யாஷிகா தலைவரானது ரசிகர்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை பாலாஜி, யாஷிகா விளையாடியது பவுல் என்று அறிவித்திருந்தால் அதற்கு அடுத்தபடியாக அதிக பந்துகளை சேகரித்திருந்த விஜயலக்ஷ்மி தான் தலைவராக வந்திருப்பார் என்பது தான் உண்மை.
No comments: