எப்பேர்ப்பட்ட பல் கரையும் 5 நிமிடத்தில் பறந்து போக.....இதோ ஒரு "இயற்கை மேஜிக்"..
எப்பேர்ப்பட்ட பல் கரையும் 5 நிமிடத்தில் பறந்து போக.....இதோ ஒரு "இயற்கை மேஜிக்"..!
நீ சிரித்தால் சிரிப்பழகு....நீ நடந்தால் நடை அழகு....என்ற பாடல் வரிகளை கேட்டு இருப்போம். அதற்கேற்றவாறு நம் பற்கள் நல்ல முறையில் தூய்மையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள மிக சிறந்த வழி என்ன என்பதை பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கொண்டு, பற்களை வெண்மையாக வைத்துக்கொள்ளலாம். தேங்காய் எண்ணெய் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, வாயில் சிறிது நேரம் ஊறவைத்து, குறிப்பாக ஐந்து நிமிடம் வரை அப்பயே வாய்க்குள் வைத்தவாறு இருக்க வேண்டும்.
அதே போன்று தேங்காய் எண்ணெய் கொண்டு, வாய் கொப்பளித்து வந்தால் பற்கள் வெண்மையாக இருக்கும். மேலும், டூத்பிரஷில் தேங்காய் எண்ணெய் தடவி கூட தினமும் தேய்த்து வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.
ஆப்பிள் சிடார் வினீகர் நோய் கிருமிகளை அழிக்க வல்லது. இதனை தினமும் சில நிமிடங்கள் பற்களில் வைத்து, பிரஸ் செய்வது போல் தேய்த்து வந்தால் நல்ல பளிச்சென்று இருக்கும்.
எலுமிச்சை பழம்
எலுமிச்சை பழம் மிக சிறந்த கிருமி நாசினி. எலுமிச்சை தோலை பற்களில் தேய்த்து வர மிகவும் வெண்மையாக மாறும். இதனை ஒரு வார காலமாக செய்து வர வந்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
No comments: