எங்கே அந்த சமூகநீதி அமைப்புகள்?
அவினாசியில் சத்துணவு சமையல்காரர் பணி இட மாற்றம் வன்மையாக கண்டிக்கத்தக்கது!
"தாழ்த்தப்பட்ட இனத்தவர்(?) சமைத்தால் எங்கள் பிள்ளைகள் மதிய உணவு உண்ண மட்டார்கள்" என்ற இடைசாதி பாப்பான்களின் மிரட்டலுக்கு அஞ்சி பெண் சமையல்காரரை இடம் மாற்றி அரசியல் சாசனச்சட்டத்திற்கு புறம்பாக சாதியத்தை அங்கிகரித்த அத்தனை அரசு ஊழியன்களும் பணி நீக்கம் செய்து கைதுச்செய்யப்பட வேண்டும்.
எடுப்பது பிச்சை இதில் என்ன சாதி?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒரு அரசு ஊழியரை யாரோ நாலுப்பேரின் சாதி வெறிக்காக பணியிட மாற்றம் செய்வது தெளிவானச்சட்ட மீறலாகும்!
"இவர்தான் சமைப்பார் தேவையுடையோர் சாப்பிடுங்கள்..இல்லை எங்களுக்கு சாதி தான் முக்கியம் என்போர் உங்கள் வீட்டிலேயே சாப்பிட்டுக்கொள்ளுங்கள்" என அறிவிக்கத் துப்பில்லாமல் ஒரு சிறு சாதிவெறிக் கூட்டத்தின் சலசலப்புக்கு அஞ்சி ஒரு அரசு பணியாளரை பணியிடம் மாற்றியிருப்பது நாட்டை கற்கலத்திற்கு இட்டுச்செல்லும் அயோக்கியத்தனமானச் செயலாகும்.
எங்கே அந்த வன்கொடுமை சட்டம்?
எங்கே அந்த சமூகநீதி அமைப்புகள்?
எங்கே அந்த "நாம எல்லாம் இந்து" என்றுக்கூவிய காவிகள் & ஜீயன்?
எங்கே அந்த மனித உரிமை அமைப்புகள்?
இந்த ஏழை தாயின் கண்ணீர் இந்த அரசை மட்டுமல்ல இதை வேடிக்கைப்பார்க்கும் நம்மையும் சேர்த்தே அழித்துவிடும்!
No comments: